Monday, August 29, 2011

நான் யார்?

நான் யார்?
என்று என்னை கேட்டேன்

வெந்நீரில் தவழ்ந்து
அவள் எச்சில் உணவை உண்டு
அவள் சுவாசத்தை சுவாசித்து
கண்ணீரில் பிறந்தேன்!
நான் யார்?
பூச்சியா? பறவையா? மிருகமா? மனிதனா?
அச்சமின்றி நான் வளர்ந்தேன்
அவள் அச்சுறுத்தலில் அஞ்சினேன்
பேதமறிந்தேன்!
நான் யார்?

பருகும் பால் அன்றி
ஆண்பால் பெண்பால் பேதமின்றி
விளையாட, அவள் பார்வையால்
பிரிவு உணர்ந்தேன்!
நான் யார்?

படர்ந்த வானில் சிறகை விரித்து,
நிலவை பிடிக்க பறக்கையில்,
திருமணக் கயிற்றில் என்னை பூட்ட,
குடும்பச் சுமை சுமக்கின்றேன்!
நான் யார்?

என் எச்சில் உணவை அவன் உண்டு
என் சுவாசத்தை சுவாசித்து
என்  தொப்புள் கொடியில் இணைந்து 
அவன் பிறக்க..

மற்றொரு பிறவி
இன்னும் ஒரு கேள்வி
நான் யார்?
அவன் யார்?

பந்தத்தில் அகப்பட்டு
பாசத்தில் பிணைந்து
காதலில்   கரைந்து
காலத்தோடு போராடி
தன்னையே மறந்தேன்!
நான் யார்?

Thursday, August 11, 2011

சுதந்திரம்

தன் உழைப்பில் கர்வம் கொண்டு
தாய் மண்ணை தெய்வம் ஆக்கி
தன் நலம் இன்றி, பிறர் நலம் கருதி
யாவறையும் குடும்பத்தினறாய் பாவித்த
இந்தியருக்குள்...

பேராசை விதைவித்து
வெளிதேசம் மோகமளித்து,
சிறிது சிறிதாய் உள்புகுந்த
புத்தீசல் அந்நியர்கள்

நிலம் கொண்டு, பணம் கொண்டு
இரட்டிப்பின் பெயரில்
போதையேற்றி, உயிர் கொண்ட நண்பர்கள்
அதற்கு தோள் கொடுத்த எட்டையர்கள்

போதையின் உச்சியில், மிதக்கின்ற அந்நிலையில்
தடுமாறிய பேதைகள்,
உருமாறி விழித்தெழுந்தார்
போராளிகளாய்!

வருங்காளம் விழித்திருக்க
சந்ததியர் தழைத்திருக்க, நம் நாடு
முன் போல் செழித்திருக்க, அவதரித்தார்
தியாகிகளாய்!

போராட்ட உச்சியில், ஒற்றுமையின் வலுமையில்
அந்நியர்கள் தெரித்தோட
ஆட்கொண்டோம் சுதந்திரத்தை
ஆகஸ்ட் 15 1947ல்

நம்மை விட்டுச்சென்ற அந்நியர்கள்
நம்மிடம் விட்டுச் சென்றார்
பேராசையை, வெளிதேச மோகத்தை
மது மாது எனும் புத்தீசல்களை...

சுதந்திரம் அடைந்தோமடி
அந்நியரின் ஆக்கத்திலிருந்து
என்று அடைவோமோ
அவர்கல் விட்டுச் சென்ற தாக்கத்திலிருந்து??

சிந்திப்போம்!!
இன்னும் ஒரு ஆகஸ்ட் 15 தேவையா???

 

Loneliness

Far away from
Fun, Frolic and Felicitation
Miles Apart
In to the solo land

Green World, Blues Surround
Lights Invade
My Eyes are closed
And so my Mind

In the Wonderland
I stand Blind!!